திங்கள், 18 ஏப்ரல், 2011

கொஞ்சமாய் சிரிங்க தம்பி............... (2)

ஜோக் 1

ஆறுமுகம் - ஏன் உங்கட குடையில நீங்களே ஓட்டை போடுறீங்க?

நூறுமுகம் - மழை விட்டுட்டா எண்டு பாக்கத்தான்



ஜோக் 2

முனியான் - சே கலியாணமே வேஸ்ட் பேசாம சாமியாராப் போகலாம் போல

தனியான் - ஒரு பெண்ணையே சமாளிக் முடியாத நீ எப்பிடி பலரைச் சமாளிக்கப்போறா?



ஜோக் 3

மகள் - அப்பா அம்மா எங்க?

அப்பா - சாமிக்கிட்ட போயிருக்கா செல்லம்

மகள் - பாவம் சாமி



ஜோக் 4

அமைச்சர் - வர்ர என்ர பிறந்தநாளுக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமெண்டு நினைக்கிறேன்.

தொண்டர் - ஏன் அரசியலை விட்டு விலகப்போறீங்களா?



ஜோக் 5

கந்தன் - என் மனைவியைப்பாத்து மறந்து கூட ”அடியே” எண்டு சொல்ல மாட்டேன்

கடம்பன் - ஏன்?

கந்தன் - சொன்னாச் செஞ்சிடுவாளோ எண்டு பயம்.


ஜோக் 6
சிந்து - யாரப்பா நீ?

பந்து - நான் கக்கூஸ் கழுவுறவன்.

சிந்து - நான் அப்பிடி ஒருத்தரையும் கூப்பிடேலயே.

பந்து - உங்கட வீட்டச் சுத்தி இருக்கிற ஆக்கள் தான் அனுப்பினவை.

ஜோக் 7
சீமு - எங்கட வீட்டு நாய் காணாமப் போட்டுது.

கோமு - அப்பிடியெண்டா பேப்பரில விளம்பரம் குடு.

சீமு - ஐயோ எங்கட நாய்க்கு வாசிக்கத்தெரியாதே..



ஜோக் 8
நீதா - டாக்டர் உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லிறதெண்டே தெரியேல. கை குடுங்க டாக்டர்
டாக்டர் - இரு எனக்கு இருக்கிறதே ஒரு கை அதயும் உனக்குத் தந்திட்டு நான் என்ன செய்யுறது.



புதன், 13 ஏப்ரல், 2011

படித்ததில்ப் பிடித்து

நான் வாசித்து இரசித்த பகுதி...
உங்கள் பார்வைக்கு..

பாரியும் தேரும்
முல்லைக்குத் தேர் கொடுத்தானாம் பாரி
அவனை உலகம் போற்றுகிறது.
அத் தேர் எதனால்ச் செய்யப்பட்டது?

குறிப்பு:-
இன்று முதல் “இம் மனிதனின் கருத்து  “::--மனிதன்--::” ஆக மாறுகிறது

திங்கள், 11 ஏப்ரல், 2011

டைட்டானிக் கப்பல் ....

டைட்டானிக் பற்றி நாம் நிறையக் கேள்விப்பட்டிருப்போம். இன்றைக்கு 99 ஆண்டுகளுக்கு முன் தனது கன்னிப் பயணத்தையே முடிவுப் பயணமாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இன்று நான் இந்த தலைப்பில் பதியும் அளவு பிரபல்யமாகி இருக்கிறது.
இக் கப்பல் தரைமட்டமாகி 99 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை இதன் விபத்துத் தொடர்பாக ஆராய்ந்து கொண்டே இருக்கின்றனர் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள். இவற்றைப் பார்க்கும் போது எனக்கு ஞாபகம் வரும் என்னொரு விடயம் பின்லேடனின் மாடிக்கட்டிட அழிப்பு.

இவை இரண்டும் நேரடியாகப் பொருந்தா விடினும் சில காரியங்கள் இரண்டையும் ஒன்றிணைக்கின்றன. அதாவது மனிதனின் மேட்டிமை எனப்படுகின்றவற்றால் அவன் தன்னை இழந்து கொண்டிருக்கிறான்.
டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன.

முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.

இந்தக்கப்பல் விபத்துக்குள்ளாகும் போது 2,223 பேர் கப்பலில்ப் பயணம் செய்துள்ளார்கள். அவர்களில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில்ப் பலர் குளிர் தாங்க முடியாது உறைந்து இறந்துள்ளனர். இந்தக் காட்சி டைட்டானிக் என்ற திரைப்படத்திலும் மிக அழகாகவும் துல்லியமாகவும் காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறான காரியம் நடைபெற்று 14, ஏப்ரல் 2011 உடன் 99 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
அடுத்த வருடம் டைட்டானிக் மறைந்து நூறாவது வருடம்..........

டைட்டானிக்கில் இருந்து இறந்தவர்கட்கு சமர்ப்பணம்......

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

அறிந்தும் அறியாத விடயங்கள் பல.......


  • கடைசியாக எல்லா இலக்கங்களும் ஒற்றை எண்களாக வரும் திகதி - 1999.11.19
    எனி வரப்போவது - 3111.11.11
  • உலகிலே மொத்தமாக 8888 மொழிகள் இருந்தன 1997லே. அதில் 2888 மொழிகள் அண்மை வரை அழிந்துவிட்டது. தற்போது 7000 மொழிகள் பாவனையில் உள்ளன.

  • இலங்கையில் 18க்கும் மேற்ப்பட்ட மொழியினர் வாழ்கின்றனர்.
  • சிம்பாவேயின் 7 பில்லியன் டொலரினை இலங்கையில் மாற்றினால் காலைச் சாப்பாடு சாப்பிடவே காணாது.

  • உலகத்தில் சிதறி வாழும் மக்களில் முதன்மையானவர்கள் இஸ்ரயேலர். அதற்கு அடுத்தவர்கள் தமிழர்கள்.
  • தற்போது மட்டும் உலகில் 265 நாடுகள் கண்டறியப்பட்டன.

  • கிறீஸ்தவப் புனித நூலான பைபிள் தற்போது 3000 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தமிழில் ரைப் செய்யலாம்..............( How to type in tamil? )

சில நாட்களுக்கு முதல் நான் ஒருவரச் சந்தித்தேன். அவரிடம் நான் கதைத்துக்கொண்டு இருந்த போது நான் சில கேள்விகளைக் கேட்டு அவர செக் பண்ணிப்பாத்தேன். அவரும் கணினி வேலைகள் நல்லாச் செய்வார். அப்ப நானும் அவரட்ட இருந்து நிறைய வறுகிட்டு என்னப்பெருசாக்காட்டுவோம் எண்டுட்டு ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுக்கு அவரால பதில் சொல்லேலாமப் போட்டுது. அது என்ன கேள்வியெண்டால்

இணையத்தில் எப்பிடி தமிழில் ரைப்பண்ணுறது?

என்ன சின்னக் கேள்விதானே இதுக்கே விடைசொல்லத்தெரியாது எண்டு தான் நினைச்சேன். அதுக்குப்பிறகு யோசித்துப்பாக்கத்தான் விளங்கீச்சு பதிவர்களாக இருப்பதால் எங்களுக்குத் தெரியுது ஆனால்ப் பலருக்கு இது தெரியாது. நிறையப்பேர் கூகிளில வந்து “How to type in Tamil?" எண்டு ரைப் பண்ணித்தான் கண்டுபிடிக்கினம். ஆனால் அதிலயும் சிலர் வெற்றியடையினம் சிலர் தோத்துப்போடுவினம். அதாலதான் இந்தப்பதிவில நான் எப்பிடித் தமிழில ரைப்பண்ணுறது எண்டு சொல்லித்தரப்போறேன். தெரிஞ்சவங்களும் வாசியுங்க. வாசிச்சு உங்க ஆதரவத் தாங்க. தெரியாதவங்க பயனடைஞ்சு கொள்ளுங்க.

1ம் படி
www.nhm.in என்ற இணையத்தள முகவரிக்குச்சென்று software இனை டவுன் லோட் செய்து கொள்ளவும்.

2ம் படி
அந்த software இனை உங்கள் கணினியில் பதிப்பித்துக்கொள்ளுங்கள்.

3ம் படி
Alt + 4 இனை அளுத்தி ரைப் செய்வதன் மூலம் நீங்கள் தமிழில் ரைப்செய்ய முடியும்.

இந்த மூன்று படிகளையும் ஒழுங்காகச் செய்வதன் மூலம் நீங்களும் உங்கள் கணினியிலே தமிழில் ரைப் செய்யலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...