திங்கள், 11 ஏப்ரல், 2011

டைட்டானிக் கப்பல் ....

டைட்டானிக் பற்றி நாம் நிறையக் கேள்விப்பட்டிருப்போம். இன்றைக்கு 99 ஆண்டுகளுக்கு முன் தனது கன்னிப் பயணத்தையே முடிவுப் பயணமாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இன்று நான் இந்த தலைப்பில் பதியும் அளவு பிரபல்யமாகி இருக்கிறது.
இக் கப்பல் தரைமட்டமாகி 99 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை இதன் விபத்துத் தொடர்பாக ஆராய்ந்து கொண்டே இருக்கின்றனர் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள். இவற்றைப் பார்க்கும் போது எனக்கு ஞாபகம் வரும் என்னொரு விடயம் பின்லேடனின் மாடிக்கட்டிட அழிப்பு.

இவை இரண்டும் நேரடியாகப் பொருந்தா விடினும் சில காரியங்கள் இரண்டையும் ஒன்றிணைக்கின்றன. அதாவது மனிதனின் மேட்டிமை எனப்படுகின்றவற்றால் அவன் தன்னை இழந்து கொண்டிருக்கிறான்.
டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன.

முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.

இந்தக்கப்பல் விபத்துக்குள்ளாகும் போது 2,223 பேர் கப்பலில்ப் பயணம் செய்துள்ளார்கள். அவர்களில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில்ப் பலர் குளிர் தாங்க முடியாது உறைந்து இறந்துள்ளனர். இந்தக் காட்சி டைட்டானிக் என்ற திரைப்படத்திலும் மிக அழகாகவும் துல்லியமாகவும் காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறான காரியம் நடைபெற்று 14, ஏப்ரல் 2011 உடன் 99 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
அடுத்த வருடம் டைட்டானிக் மறைந்து நூறாவது வருடம்..........

டைட்டானிக்கில் இருந்து இறந்தவர்கட்கு சமர்ப்பணம்......

3 கருத்துகள்:

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...