திங்கள், 28 பிப்ரவரி, 2011

எண்நான்கு எத்தனை?

இண்டைக்கும் ஒரு கதையப்பாப்பம்.

ஒரு ஆசிரியர் ஒருவர் பாடம் படிப்பிச்சுக்கொண்டிருந்த போது ஒரு மாணவன் கதைச்சதைக் கண்டுட்டார். அவருக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துட்டுது.
உடன கேட்டார் “எட்ட நாலால பெருக்கினா எத்தினை?” அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“சேர் இருபத்தினா...........”

“உங்களுக்கு படிப்பிக்கேக்க கவனிக்கத்தெரியாது... கேள்வி கேட்டா முழுசிக்கொண்டு நில்லுங்க.”
அவரே தொடர்ந்தார் ”போய் பிறின்சிப்பலட்ட கேட்டுட்டு வா” எண்டு கலச்சுவிட்டார். அவனும் பாவம் சரியெண்டு போய் அடியும் வாங்கிப்போட்டு விடையையும் கேட்டுட்டு வந்தான்.

ஆசிரியர் கேட்டார் ”என்ன பிறின்சிப்பல் சொன்னவர்?“
“சேர் முப்பத்தி ஒண்டு”

“என்ன?” அவரே தொடர்ந்தார் “இப்பத்தையப் பிறின் சிப்பலுகளை மாத்தவேணும். டேய் அவர் சொன்னதும் பிழையடா முப்பத்திமூண்டுதான் விடை”

“.....................”

இப்பிடி நடக்குதோ இல்லையோ, கேக்க நல்லாயிருக்கு இல்ல? என்ன நாலு தர எட்டு என்னண்டு தெரியாதோ?
நான் கல்குலேட்டரில பாத்ததில முப்பத்தி இரண்டு எண்டு விழுகுது. எதுக்கும் உங்கட கல்குலெட்டரிலயும் செக் பண்ணுங்கோ..

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பல்லேலக்கா

”பல்லேலக்கா பல்லேலக்கா ...............”

சில காலத்திற்கு முன் எல்லா வயதினரின் வாய்களும் முணுமுணுத்த வரிகள்.
”காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?” இப்பாடல் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்டாலும் சில விந்தைகள் இப்பாடலில் இருக்கிறது பார்த்தார்களா? ஏன் நானே இதுவரை சும்மாதான் பாடினேன். அதுசரி பல்லேலக்கா எண்டா என்ன?

அத விடு பாட்டு நல்லாயிருக்ககெல்லோ பாடிட்டுச்சும்மா இரு எண்டு சொல்லாமல் கொஞ்சம் என்னெண்டுதான் பாருங்கோவன். பாட்டு எதுகை மோனையால்த் தொடுக்கப்பட்டிருப்பதுக்காக பாடலாசிரியர் இப்பிடிப் பாடினாரோ தெரியாது. சீச்சீ அப்பிடியிருக்காது. ஏனெண்டா இப்பிடி ஒரு சொல் எதாவது ஒரு மொழியில இருந்து தான் வந்திருக்க வேணும். இதை ஆராட்சி செய்யக் காலம் பிந்தினாலும் ஒருக்கா இந்தப் பதிவினை ஏற்றுக்கொள்ளுங்க.
வைரமுத்து எனக்கு மிகவும் பிடித்ததொரு பாடலாசிரியராவார். இவரின் ரசிகன் என்ற வகையில். அவர் பாடிய ஒரு பாடலின் ஒரு சொல்பற்றி இங்கே நான் பதிகிறேன்.

சரி என்னண்டா நான் சொல்லவந்தத விட்டுட்டு என்னவோ பதியிறேன் எண்டு சினப்படாதேயுங்கோ. நான் சொல்ல வந்தத சொல்லுறேன். சரி திருப்பி பல்லேலக்காவைப் பாப்போம். இது பெயரா? வினையா? செயற்படுபொருளோ? சரி சரி குழம்பாதையுங்கோ. நான் சொல்லுறேன் .

பல்லேலக்கா என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும். இது ஒரு வகை இசைக்கருவியாகும். ரஷ்ய நாட்டில் மிகவும் பிரபல்யமான இசைக்கருவிகளில் இதுகும் ஒன்றாகும். முன்னே முக்கோண வடிவமும் அதனைத்தொடர்ந்து நீளமான செவ்வக வடிவ மரத்தில் கம்பியினைப் பாவித்து ஒலி எழுப்பக்கூடிய ஒரு இசைக் கருவி வகை.  இது மூன்று கம்பிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மிகவும் பரவலாகப் பேசப்படும் இசைக் கருவியாக இருந்தது உண்மைதான்.
இப்படியாக வைரமுத்து அவர்கள் இப்படியொரு சொல்லை வைத்து ஒரு பாடலையே பாடியுள்ளார்.

இது அவரின் திறமைகளில் ஒன்று..

சனி, 12 பிப்ரவரி, 2011

Nokia போனுடன் புஷ்


இந்தப்பதிவில் ஒரு சிறிய உரையாடல்.
புஷ் - ஹலோ
சுந்தர் - ஹலோ புஷ்ஷோட கதைக்கலாமா?
புஷ் - ஓம் நான்தான் கதைக்கிறேன்.
சுந்தர் - நீங்கள் ஈராக் யுத்தத்தில மக்களுக்கு எதிரான ஆட்ச்சியை வென்டீங்களாமே அதுக்கு வாழ்த்துச்சொல்லத்தான் எடுத்தனான்.
புஷ் - ஆ தங்யூ
சுந்தர் - நீங்கள் எந்த நாட்டிலையும் மக்களுக்கு எதிரான ஆட்ச்சி நடந்தாலும் மக்களைக் காப்பாத்துவீங்களோ?
புஷ் - ஓம் நானில்லாட்டிலும் ஒபாமாவட்டச் சொல்லியாவது காப்பாத்துவேன்.
சுந்தர் - நிச்சயமா?
புஷ் - நிச்சயமா.
சுந்தர் - எங்கட நாட்டிலையும் கிட்டத்தட்ட மக்களுக்கு எதிரான ஆட்ச்சி மாதிரித்தான் நடக்குது. காப்பாத்துவீங்களோ?
புஷ் - ஓம் காப்பாத்தலாம். முதல் உங்கட நாட்டில எண்ணெய் வளமிருக்கா எண்டு சொல்லுங்கோ?
சுந்தர் - இல்ல
புஷ் - வையடா போனை நாயே
சுந்தர் - ...........................
(யாவும் உண்மை கலந்த கற்பனை)

வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஒரு தாய் மக்கள் நாமாவோம்.

இன்று எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 63 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
இந்தச் சுதந்திர தின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த 63 வருடங்களில் இலங்கையில் எத்தனை எத்தனை நிகழ்வுகள், அனர்த்தங்கள், போர்கள் அப்பப்பா......... என்றாலும் எல்லாம் அவன் செயல் என்று என(ம)து மனதைத்தேற்றிக்கொள்வோம்.
நடந்தவற்றை மறந்து, ஒன்றிணைவோம்.
எமது நாடு (emathu naadu)
அபே தேசயய் (apea theasaiyai)
அவ்வர் கங்க்றி(our country)
Related Posts Plugin for WordPress, Blogger...