ஞாயிறு, 19 ஜூன், 2011

எறும்பு யானை கதை 2


மற்று மொரு எறும்பு யானை கதை.
எறும்புக்கும் யானைக்கும் சண்டை வந்துவிடுமாம்.
இரண்டு எறும்புகள் மரத்தின் மீது ஏறி இருந்து கொண்டு யானையைப் பேசிக்கொண்டிருக்குமாம்(திட்டிக்கொண்டிருக்குமாம்).
அதால யானைக்குக் கடுமையான கோபம் வந்துவிடுமாம்.
மரத்திலிருக்கிற எறும்புகளை நோக்கி தனது தும்பிக்கையால் ஊதி விடுமாம். எறும்புகள் மிகவும் கெட்டியாகப் மரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. இதனால் தனது முழு பலத்தையும் சேர்த்து யானை ஊதிவிட்டதாம்.
ஒரு எறும்பு நிலைதவறி யானையின் மீது விழுந்து விட்டதாம்.
இதனை எதிர்பாராத மற்ற எறும்பு சொன்னதாம்.
“மச்சான் கெட்டியாய்ப்பிடிச்சிரு நான் எங்கட ஆக்களக் கூட்டிட்டு வாறன்”
யானை “.....????!!!!!!!!!”

வியாழன், 16 ஜூன், 2011

ஆங்கிலம் பேசுவோம்....


சட்டுப் புட்டெண்டு இங்கிலிஸ் கதைக்க யாருக்குத்தான் ஆசையில்ல....
பள்ளிக்கூடத்தில இங்கிலிஸ் பாடமெண்டா கக்குஸ் எண்டாலும் பறவாயில்ல எண்டு கக்குஸ்க்குள்ள இருக்கிற பலர எனக்குத் தெரியும்......(சத்தியமா நானில்லயுங்க)
ஆனாக் கொஞ்ச இங்கிலிஸ தெரிஞ்சு வைச்சுக்கொண்டு நிறைய பில்டப் போடுறவங்களும் இல்லாமலில்ல....
இந்தப் பதிவில நான் கொஞ்சம் இங்கிலிச வைச்சுக்கொண்டு உங்கள சிரிக்க வைக்க ஆசப் படுறேன். இல்ல எனக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு பலர் நச்சுக்கொண்டு இருக்கினமெல்லோ அதுதான்.....


பள்ளிக்கூடத்தில ரீச்சர் வகுப்ப விட்டுப் போன கொஞ்ச நேரத்தில சேர் ஒராள் வந்து கேட்டாராம்
"Where is Your Teacher?"
அப்ப மாணவங்க சொன்னாங்களாம்
"Just now, she Passed away."
இதால மாஷ்டருக்குகோவம் வந்துடுமாம்.உடன
"Go and rotate the Ground"
எண்டாராம்........


வியாழன், 26 மே, 2011

சைனாக்காரரின்ர பெயர்.....

சைனாக்காரரின்ர பெயருகளெல்லாம் மிகவும் வித்தியாசமானது.
“பிங் சிங் சுவிங்” என்றேல்லாம் பெயர் வைப்பார்கள்.
அத வச்சு ஒரு கதை எழுத யோசிச்சனான்.. அத வாசிச்சுப் பாத்திட்டு என்ன மாதிரி இருக்கெண்டு சொல்லுங்கோ.
அது என்னண்டா
சைனாவில ஒரு வெள்ளை மனுசனுக்கும் மனுசிக்கும் கலியானம் ஜாம் ஜாம் எண்டு நடந்தது.
கலியானம் முடிந்து முதல்ப் பிள்ளை பிறந்தது. அது சிகப்பாகவும் அழகாகவும் இருந்தது.
தகப்பன் ஆசையோட எடுத்துப் பாத்துட்டு “சிங் பைங் றய்ங்” என்று பெயர் வைப்பாராம்.
அடுத்த பிள்ளை பிறக்குமாம்.
அதுகும் வெள்ளையாய் இருக்குமாம். அதுக்கு தகப்பன் “நிம் சிங் றிங்” என்று பெயர் வைத்தானாம்.
மூன்றாம் பிள்ளை பிறந்தது.
அதைத் தகப்பன் எடுத்துப்பாத்தானாம் நல்ல கறுப்பு நிறத்தில ஒரு பிள்ளையாய் இருந்ததாம்.
உடனே தகப்பன் “சம் திங் றோங்” என்று பெயர் வைத்து விடுவானாம்.

திங்கள், 23 மே, 2011

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு PenDrive

நான் கருணானிதியல்ல, எனது பதிவிற்கு வோட்டுப்போட்டால் ஒரு பிளாஷ்(Flash) இலவசம் எண்டு சொல்ல.
சரி நான் உங்களுக்கு, அதாவது இத வாசிக்கிற எல்லாருக்கும் பிளாஷ் ஒண்டு பிறீயாத்(Free) தரப்போறன். கோபப்படாதயுங்க... தொடர்ந்து வாசியுங்க..
நான் பில்கேட்ஸ் அல்ல பாக்கிற எல்லாருக்கும் பிளாஷ் குடுக்க..
ஆனாலும் நான் உங்களுக்கு அதிரடியாக தரப்போகிறேன் ஒரு பிளாஷ்...
இதப்பாத்தா வடிவேலுவின்ர பம்பல் மாதிரி தருவேன் ஆனாத் தரமாட்டேன்........
இந்த உலகத்தில பில்லியன் கணக்கான வெப்சைட் என சொல்லப்படும் இணையப்பக்கங்கள் உள்ளன.இதில ஒண்டாவது எனக்கு பிறீயா பிளாஷ் ஒண்டு தராதோ எண்டு தேடினதில கிடைச்சது தான் இந்தப் பிறீப் பிளாஷ்.

பிளாஷ் எண்டா என்ன?
ஒரு கணினியில இருக்கிற ஓரு தரவை சேகரித்து வைக்க அல்லது அதனை வேறு ஒரு கணினிக்கு எடுத்துச்செல்ல உதவும் ஒரு சாதனம்.

இவை அனைத்தயும் தருகிறதுதான் www.mydrive.ch .
இதில ஒரு கணக்கொண்ட ஆரம்பிக்கிறது மட்டும்தான் எமக்கு வேலை. அதுக்குப்பிறகு அது எமது கணினியில் வேலைசெய்வது போலவே அந்த பிளாஷையும் பயன்படுத்த முடியும்.
இதில இருக்கிற பல அனுகூலங்களால் இது உண்மையான பிளாஷ் போலவே இருக்கிறது....
இப்ப நான் உங்களுக்கு ஒரு இலவச பிளாஷ் ஒண்டு தந்திருக்கிறேன். இதப் பயன்படுத்துவதும் விடுவதும் உங்கள் கையில்......

திங்கள், 16 மே, 2011

ஓசியாய்க் கிடைத்த ரீவீ

இன்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர். இலங்கையின் UN பிரதிநிதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தன பதவி வகித்த காலம். அப்போது உலகமெங்கிலும் நடந்து கொண்டிருந்தது உலமகா யுத்தம் இரண்டு.
விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்தது இரண்டாம் மகாயுத்தம். எங்கும் குண்டுவெடிப்பும், மரணமும், குண்டு வீச்சும், கொலையும் என பயப்படுத்திக்கொண்டிருந்த போது.............
ஜப்பானை உலகமே திரும்பிப் பார்த்தது. எவ்வாறு யுத்தத்தில் வெற்றி பெற்றதா? இல்லை யுத்தத்தை முடிவுக்குக் கொணர்ந்ததா? எதுவுமில்லை ஜப்பான் அணுகுண்டுக்கு இரையானது. மிகவும் பெரிய இழப்பு ஜப்பானுக்கு ஏற்ப்பட்டது.
பலலட்சக்கணக்கான மக்கள் எங்கும் பிணங்களாய் அவதாரம் எடுத்து வீதியில்ப் படுத்திருந்தனர். எங்குமே மக்களின் பிணங்களாக காட்சியளித்தன. இந்த நேரத்தில்த்தான் எமது நாட்டின் UN பிரதிநிதி தனது வேலையைக் காட்டினார்.
உலகில் எந்த நாடும் ஜப்பான் மக்களுக்காய் பரிந்து பேசவில்லை. ஆனால் ஆசிய கண்டத்திலே இருக்கும் சிறிய நாடான இலங்கை ஜப்பானுக்கான குண்டு வீச்சினை கண்டித்து UN இல் தனது வாதத்தை முன்வைத்தது. அதனை வன்மையாகக் கண்டித்தது.
இது ஏன் நடந்ததோ எமக்குத் தெரியாது. அநுதாபத்தில்க் கதைத்தாரோ இல்லை என்னவோ எமக்குத் தெரியாது. ஆனால் ஜப்பான் இந்தக் காரியத்திற்குத் தனது நன்றிக்கடனைத் தெரிவித்தது. எவ்வாறு தெரிவித்தது?
ஆசியாக் கண்டத்திலேயே எல்லா நாடுகளும் ஏன் இந்தியா கூட தனது முதலாவது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை கறுப்பு வெள்ளை நிறத்திலேயே தொடங்கியது. ஆனால் எமது நாடான இலங்கையோ வர்ணத்தொலைக்காட்சியாகவே தொடங்கியது.
இது சொந்தச் சொத்தல்ல. ஜப்பான் நாட்டு மக்கள் UN பிரதிநிதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதி பதவிக்கு வந்தவுடன் இலங்கை நாட்டுக்கு முற்றிலும் இலவசமாக வர்ண ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தை கட்டித்தந்தது.
அப்ப இதுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்குத்தானே ஹி..ஹி :-)

ஞாயிறு, 15 மே, 2011

எறும்பு யானை 1


இப்ப கொஞ்சக்காலமா எறும்பு யானைக் கதைகள் பேமஸா இருக்குது. அதால உங்களுக்கு ஒரு கதை.
எறும்புகளுக்கெல்லாம் கார் றேஸ் வைச்சாங்களாம் எறும்பு சனசமூக நிலையம். எறும்புகளும் உற்சாகத்தோட பெயரெல்லாம் கொடுத்து பங்கு பற்றினமாம்.
“ஆம் இன்று எமது சனசமூக நிலைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எறும்புகளுக்கான சைக்கிளோட்டப் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.”
என்று அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
போட்டி ஆரம்பமானது.
“ஒன் யுவர் மார்க்.”
“செற்”
“றெடி”
“கோ”
எல்லா எறும்புகளும் அந்த நூறு மீற்றர் சைக்கிளோட்டப் போட்டியை வெல்லும் நோக்குடன் மிக வேகமாக சென்று கொண்டிருந்தன.
திடீரென......
இடையில் ஒரு யானை ஒன்று பாதையைக் கடந்தது
உடனே ஒரு எறும்பு கத்தியது
“டேய் சைக்கிளில அடிபட்டுச் செத்திடாதயடா.........”

திங்கள், 18 ஏப்ரல், 2011

கொஞ்சமாய் சிரிங்க தம்பி............... (2)

ஜோக் 1

ஆறுமுகம் - ஏன் உங்கட குடையில நீங்களே ஓட்டை போடுறீங்க?

நூறுமுகம் - மழை விட்டுட்டா எண்டு பாக்கத்தான்



ஜோக் 2

முனியான் - சே கலியாணமே வேஸ்ட் பேசாம சாமியாராப் போகலாம் போல

தனியான் - ஒரு பெண்ணையே சமாளிக் முடியாத நீ எப்பிடி பலரைச் சமாளிக்கப்போறா?



ஜோக் 3

மகள் - அப்பா அம்மா எங்க?

அப்பா - சாமிக்கிட்ட போயிருக்கா செல்லம்

மகள் - பாவம் சாமி



ஜோக் 4

அமைச்சர் - வர்ர என்ர பிறந்தநாளுக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமெண்டு நினைக்கிறேன்.

தொண்டர் - ஏன் அரசியலை விட்டு விலகப்போறீங்களா?



ஜோக் 5

கந்தன் - என் மனைவியைப்பாத்து மறந்து கூட ”அடியே” எண்டு சொல்ல மாட்டேன்

கடம்பன் - ஏன்?

கந்தன் - சொன்னாச் செஞ்சிடுவாளோ எண்டு பயம்.


ஜோக் 6
சிந்து - யாரப்பா நீ?

பந்து - நான் கக்கூஸ் கழுவுறவன்.

சிந்து - நான் அப்பிடி ஒருத்தரையும் கூப்பிடேலயே.

பந்து - உங்கட வீட்டச் சுத்தி இருக்கிற ஆக்கள் தான் அனுப்பினவை.

ஜோக் 7
சீமு - எங்கட வீட்டு நாய் காணாமப் போட்டுது.

கோமு - அப்பிடியெண்டா பேப்பரில விளம்பரம் குடு.

சீமு - ஐயோ எங்கட நாய்க்கு வாசிக்கத்தெரியாதே..



ஜோக் 8
நீதா - டாக்டர் உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லிறதெண்டே தெரியேல. கை குடுங்க டாக்டர்
டாக்டர் - இரு எனக்கு இருக்கிறதே ஒரு கை அதயும் உனக்குத் தந்திட்டு நான் என்ன செய்யுறது.



புதன், 13 ஏப்ரல், 2011

படித்ததில்ப் பிடித்து

நான் வாசித்து இரசித்த பகுதி...
உங்கள் பார்வைக்கு..

பாரியும் தேரும்
முல்லைக்குத் தேர் கொடுத்தானாம் பாரி
அவனை உலகம் போற்றுகிறது.
அத் தேர் எதனால்ச் செய்யப்பட்டது?

குறிப்பு:-
இன்று முதல் “இம் மனிதனின் கருத்து  “::--மனிதன்--::” ஆக மாறுகிறது

திங்கள், 11 ஏப்ரல், 2011

டைட்டானிக் கப்பல் ....

டைட்டானிக் பற்றி நாம் நிறையக் கேள்விப்பட்டிருப்போம். இன்றைக்கு 99 ஆண்டுகளுக்கு முன் தனது கன்னிப் பயணத்தையே முடிவுப் பயணமாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இன்று நான் இந்த தலைப்பில் பதியும் அளவு பிரபல்யமாகி இருக்கிறது.
இக் கப்பல் தரைமட்டமாகி 99 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை இதன் விபத்துத் தொடர்பாக ஆராய்ந்து கொண்டே இருக்கின்றனர் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள். இவற்றைப் பார்க்கும் போது எனக்கு ஞாபகம் வரும் என்னொரு விடயம் பின்லேடனின் மாடிக்கட்டிட அழிப்பு.

இவை இரண்டும் நேரடியாகப் பொருந்தா விடினும் சில காரியங்கள் இரண்டையும் ஒன்றிணைக்கின்றன. அதாவது மனிதனின் மேட்டிமை எனப்படுகின்றவற்றால் அவன் தன்னை இழந்து கொண்டிருக்கிறான்.
டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன.

முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.

இந்தக்கப்பல் விபத்துக்குள்ளாகும் போது 2,223 பேர் கப்பலில்ப் பயணம் செய்துள்ளார்கள். அவர்களில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில்ப் பலர் குளிர் தாங்க முடியாது உறைந்து இறந்துள்ளனர். இந்தக் காட்சி டைட்டானிக் என்ற திரைப்படத்திலும் மிக அழகாகவும் துல்லியமாகவும் காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறான காரியம் நடைபெற்று 14, ஏப்ரல் 2011 உடன் 99 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
அடுத்த வருடம் டைட்டானிக் மறைந்து நூறாவது வருடம்..........

டைட்டானிக்கில் இருந்து இறந்தவர்கட்கு சமர்ப்பணம்......

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

அறிந்தும் அறியாத விடயங்கள் பல.......


  • கடைசியாக எல்லா இலக்கங்களும் ஒற்றை எண்களாக வரும் திகதி - 1999.11.19
    எனி வரப்போவது - 3111.11.11
  • உலகிலே மொத்தமாக 8888 மொழிகள் இருந்தன 1997லே. அதில் 2888 மொழிகள் அண்மை வரை அழிந்துவிட்டது. தற்போது 7000 மொழிகள் பாவனையில் உள்ளன.

  • இலங்கையில் 18க்கும் மேற்ப்பட்ட மொழியினர் வாழ்கின்றனர்.
  • சிம்பாவேயின் 7 பில்லியன் டொலரினை இலங்கையில் மாற்றினால் காலைச் சாப்பாடு சாப்பிடவே காணாது.

  • உலகத்தில் சிதறி வாழும் மக்களில் முதன்மையானவர்கள் இஸ்ரயேலர். அதற்கு அடுத்தவர்கள் தமிழர்கள்.
  • தற்போது மட்டும் உலகில் 265 நாடுகள் கண்டறியப்பட்டன.

  • கிறீஸ்தவப் புனித நூலான பைபிள் தற்போது 3000 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தமிழில் ரைப் செய்யலாம்..............( How to type in tamil? )

சில நாட்களுக்கு முதல் நான் ஒருவரச் சந்தித்தேன். அவரிடம் நான் கதைத்துக்கொண்டு இருந்த போது நான் சில கேள்விகளைக் கேட்டு அவர செக் பண்ணிப்பாத்தேன். அவரும் கணினி வேலைகள் நல்லாச் செய்வார். அப்ப நானும் அவரட்ட இருந்து நிறைய வறுகிட்டு என்னப்பெருசாக்காட்டுவோம் எண்டுட்டு ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுக்கு அவரால பதில் சொல்லேலாமப் போட்டுது. அது என்ன கேள்வியெண்டால்

இணையத்தில் எப்பிடி தமிழில் ரைப்பண்ணுறது?

என்ன சின்னக் கேள்விதானே இதுக்கே விடைசொல்லத்தெரியாது எண்டு தான் நினைச்சேன். அதுக்குப்பிறகு யோசித்துப்பாக்கத்தான் விளங்கீச்சு பதிவர்களாக இருப்பதால் எங்களுக்குத் தெரியுது ஆனால்ப் பலருக்கு இது தெரியாது. நிறையப்பேர் கூகிளில வந்து “How to type in Tamil?" எண்டு ரைப் பண்ணித்தான் கண்டுபிடிக்கினம். ஆனால் அதிலயும் சிலர் வெற்றியடையினம் சிலர் தோத்துப்போடுவினம். அதாலதான் இந்தப்பதிவில நான் எப்பிடித் தமிழில ரைப்பண்ணுறது எண்டு சொல்லித்தரப்போறேன். தெரிஞ்சவங்களும் வாசியுங்க. வாசிச்சு உங்க ஆதரவத் தாங்க. தெரியாதவங்க பயனடைஞ்சு கொள்ளுங்க.

1ம் படி
www.nhm.in என்ற இணையத்தள முகவரிக்குச்சென்று software இனை டவுன் லோட் செய்து கொள்ளவும்.

2ம் படி
அந்த software இனை உங்கள் கணினியில் பதிப்பித்துக்கொள்ளுங்கள்.

3ம் படி
Alt + 4 இனை அளுத்தி ரைப் செய்வதன் மூலம் நீங்கள் தமிழில் ரைப்செய்ய முடியும்.

இந்த மூன்று படிகளையும் ஒழுங்காகச் செய்வதன் மூலம் நீங்களும் உங்கள் கணினியிலே தமிழில் ரைப் செய்யலாம்.

செவ்வாய், 29 மார்ச், 2011

கொஞ்சமாய் சிரிங்க தம்பி...............


ஜோக் 1
வசந்தன் - எங்கட ரீச்சருக்கு வர வர ஞாபக மறதி கூடிற்றுடா
சாந்தன் - ஏன்ரா?
வசந்தன் - திருக்குறள பிளக்போர்ட்டில் எழுதிட்டு ”இதை எழுதினது யார்?” எண்டு கேக்கிறாடா

ஜோக் 2
சம்பந்தம் - ஹலோ நான் சம்பந்தம் கதைக்கிறேன்
பிள்ளையான் - ஹலோ போன்ல எல்லாம் சம்மந்தம் கதைக்க ஏலாது நேர வாங்க

ஜோக் 3
சுப்பு - நேற்று உனக்குக் கொலை மிரட்டல் வந்தது எண்டு கேஸ் போட்டிருக்கிறியாமே. ஏன்?
யம்பு - ஓம் நேற்றுத்தான் டொக்டர் எனக்கு ஒப்பிரேசன் எண்டு சொல்லி டேற் குறிச்சவர்

ஜோக் 4
மனோ - டொக்டர் நேற்று நீ்ங்க தந்த மருந்து கனமாயிருந்திச்சு கஸ்ரப்பட்டுத்தான் போட்டனான்
டொக்டர் - ஓகோ நேற்றுக் காணாமப்போன தேமாமீற்றரை எடுத்தது நீதானா?

ஜோக் 5
ரீச்சர் - ஒண்டும் ஒண்டும் எத்தனை சொல்லு?
மாணவன் - ரீச்சர் உங்களுக்குத் தெரியாட்டி என்னட்டயே கேக்கிறது?

ஜோக் 6
பாட்டி - ஏன்ரா தம்பி சைக்கிளை உறுட்டிட்டுப் போறாய்?
மாதவன் - காத்தில்லப் பாட்டி
பாட்டி - அடேய் இப்பிடிக் காத்தடிக்குது காத்தில்லயெண்டு சொல்லுற

ஜோக் 7
போல் - டே உன்ர ஈ-மெயில் பாஸ்வேர்ட்டைக் கண்டுபுடிச்சிட்டேன்
பீற்றர் - எங்க சொல்லு பாப்பம்
போல் - புள்ளி புள்ளி புள்ளி புள்ளி தானே
பீற்றர் - போடா பேயா ”அம்பத்தி நாலு எண்பத்தாறு”

ஜோக் 8
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்
டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க

ஜோக் 9
ஆசிரியர் - ஏன் லேட்?
மாணவன் - ரீச்சர் சைக்கிள் ஒட்டு
ஆசிரியர் - பஸ்ஸில வர வேண்டியது தானே
மாணவன் - பஸ் வாங்கிற அளவுக்கு வசதியில்ல சேர்

வெள்ளி, 25 மார்ச், 2011

காசநோய் (Tuberculosis) TB

இம்மாதம்(மார்ச்) 24ம் திகதி காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. அத்தினத்தை முன்னிட்டு இதைப் பதிவிடுகிறேன்.
காசநோய் என்பது உலகத்தில் மிகவும் வேகமாகப் பரவிவரும் ஒரு நோயாகும். வளியிலிருக்கும் Mycobacterium tuberculosis எனும் ஒருவகை நுண்ணுயிரால்ப் பரவும் நோயே இது. இது எமது சுவாசப்பையைதாக்கும் ஒரு நோயாகும். இது சுவாசப்பையை மாத்திரமன்று சிறுநீரகம், எலும்பு, மற்றும் மூளையையும் பாதிக்கும் ஒரு நோயெனக் கண்டறியப்பட்டுள்ளது.
World Health Organization (WHO) எனப்படும் அமைப்பின் கணிப்பின்படி வரும் 20 ஆண்டில் 35 மில்லியன் மக்களை இந்நோய் கொல்லுமாம். இக்கிருமிகள் இன்றோ நேற்றோ தோன்றியதல்ல கி.மு. 2000மாம் ஆண்டுகளுக்கு முதலே இருந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பாரிய நோய் இன்று உலகமெங்கும் பரவி வைத்தியர்களின் கண்களிலே விரல் விட்டு ஆட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்நோயை நிச்சயமாக மாற்றலாம். இது மருந்து மூலம் மாற்றக்கூடிய ஒரு நோயாகும்.

செவ்வாய், 8 மார்ச், 2011

இரக்கமா?


பீப் பிபீப்
எண்ட ஹார்னுடன்
போற வாகனத்தை
முந்திக்கொண்டு
போன என்னை
மறிக்கிறாள் பெண்
வயசு வெறும் பத்துத்தான்

“அடுத்த சந்தியில
இறக்கி விடுங்கோவேன்”

“ஏய் ஆர் நீ எனிமேல்
இப்பிடிக் கேட்டாப்
பல்ல உடைச்சுப்போடுவேன்”

இப்பிடியும் பதில்
சொல்லுறதோ?

என்ன செய்ய
என்ர மகளயும்
இப்பிடித்தான்
கடத்தி..
கொண்டுட்டாங்க
படுபாவிகள்...........

வெள்ளி, 4 மார்ச், 2011

கிரிக்கட் ஹைக்கூ

கிரிக்கட் சீசனில என்னால முடிஞ்சது.

எவ்வளவு அடித்தாலும்
அழுவதில்லை
கிரிக்கட் மட்டை

நிற்க நேரமின்றி
சுத்தித் திரிகிறது
பந்து

பதினஞ்சு பேரைக்
பாதுகாக்கிறது
பவுன்றி லைன்

நேரத்தைவிட வேகமாய்
மாறுது
ஸ்கோர்

இவற்றிற்கு நடுவில்
வேலையில்லாமல் இருவர்
கைகளை உயத்திக்கொண்டு

திங்கள், 28 பிப்ரவரி, 2011

எண்நான்கு எத்தனை?

இண்டைக்கும் ஒரு கதையப்பாப்பம்.

ஒரு ஆசிரியர் ஒருவர் பாடம் படிப்பிச்சுக்கொண்டிருந்த போது ஒரு மாணவன் கதைச்சதைக் கண்டுட்டார். அவருக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துட்டுது.
உடன கேட்டார் “எட்ட நாலால பெருக்கினா எத்தினை?” அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“சேர் இருபத்தினா...........”

“உங்களுக்கு படிப்பிக்கேக்க கவனிக்கத்தெரியாது... கேள்வி கேட்டா முழுசிக்கொண்டு நில்லுங்க.”
அவரே தொடர்ந்தார் ”போய் பிறின்சிப்பலட்ட கேட்டுட்டு வா” எண்டு கலச்சுவிட்டார். அவனும் பாவம் சரியெண்டு போய் அடியும் வாங்கிப்போட்டு விடையையும் கேட்டுட்டு வந்தான்.

ஆசிரியர் கேட்டார் ”என்ன பிறின்சிப்பல் சொன்னவர்?“
“சேர் முப்பத்தி ஒண்டு”

“என்ன?” அவரே தொடர்ந்தார் “இப்பத்தையப் பிறின் சிப்பலுகளை மாத்தவேணும். டேய் அவர் சொன்னதும் பிழையடா முப்பத்திமூண்டுதான் விடை”

“.....................”

இப்பிடி நடக்குதோ இல்லையோ, கேக்க நல்லாயிருக்கு இல்ல? என்ன நாலு தர எட்டு என்னண்டு தெரியாதோ?
நான் கல்குலேட்டரில பாத்ததில முப்பத்தி இரண்டு எண்டு விழுகுது. எதுக்கும் உங்கட கல்குலெட்டரிலயும் செக் பண்ணுங்கோ..

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பல்லேலக்கா

”பல்லேலக்கா பல்லேலக்கா ...............”

சில காலத்திற்கு முன் எல்லா வயதினரின் வாய்களும் முணுமுணுத்த வரிகள்.
”காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?” இப்பாடல் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்டாலும் சில விந்தைகள் இப்பாடலில் இருக்கிறது பார்த்தார்களா? ஏன் நானே இதுவரை சும்மாதான் பாடினேன். அதுசரி பல்லேலக்கா எண்டா என்ன?

அத விடு பாட்டு நல்லாயிருக்ககெல்லோ பாடிட்டுச்சும்மா இரு எண்டு சொல்லாமல் கொஞ்சம் என்னெண்டுதான் பாருங்கோவன். பாட்டு எதுகை மோனையால்த் தொடுக்கப்பட்டிருப்பதுக்காக பாடலாசிரியர் இப்பிடிப் பாடினாரோ தெரியாது. சீச்சீ அப்பிடியிருக்காது. ஏனெண்டா இப்பிடி ஒரு சொல் எதாவது ஒரு மொழியில இருந்து தான் வந்திருக்க வேணும். இதை ஆராட்சி செய்யக் காலம் பிந்தினாலும் ஒருக்கா இந்தப் பதிவினை ஏற்றுக்கொள்ளுங்க.
வைரமுத்து எனக்கு மிகவும் பிடித்ததொரு பாடலாசிரியராவார். இவரின் ரசிகன் என்ற வகையில். அவர் பாடிய ஒரு பாடலின் ஒரு சொல்பற்றி இங்கே நான் பதிகிறேன்.

சரி என்னண்டா நான் சொல்லவந்தத விட்டுட்டு என்னவோ பதியிறேன் எண்டு சினப்படாதேயுங்கோ. நான் சொல்ல வந்தத சொல்லுறேன். சரி திருப்பி பல்லேலக்காவைப் பாப்போம். இது பெயரா? வினையா? செயற்படுபொருளோ? சரி சரி குழம்பாதையுங்கோ. நான் சொல்லுறேன் .

பல்லேலக்கா என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும். இது ஒரு வகை இசைக்கருவியாகும். ரஷ்ய நாட்டில் மிகவும் பிரபல்யமான இசைக்கருவிகளில் இதுகும் ஒன்றாகும். முன்னே முக்கோண வடிவமும் அதனைத்தொடர்ந்து நீளமான செவ்வக வடிவ மரத்தில் கம்பியினைப் பாவித்து ஒலி எழுப்பக்கூடிய ஒரு இசைக் கருவி வகை.  இது மூன்று கம்பிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மிகவும் பரவலாகப் பேசப்படும் இசைக் கருவியாக இருந்தது உண்மைதான்.
இப்படியாக வைரமுத்து அவர்கள் இப்படியொரு சொல்லை வைத்து ஒரு பாடலையே பாடியுள்ளார்.

இது அவரின் திறமைகளில் ஒன்று..

சனி, 12 பிப்ரவரி, 2011

Nokia போனுடன் புஷ்


இந்தப்பதிவில் ஒரு சிறிய உரையாடல்.
புஷ் - ஹலோ
சுந்தர் - ஹலோ புஷ்ஷோட கதைக்கலாமா?
புஷ் - ஓம் நான்தான் கதைக்கிறேன்.
சுந்தர் - நீங்கள் ஈராக் யுத்தத்தில மக்களுக்கு எதிரான ஆட்ச்சியை வென்டீங்களாமே அதுக்கு வாழ்த்துச்சொல்லத்தான் எடுத்தனான்.
புஷ் - ஆ தங்யூ
சுந்தர் - நீங்கள் எந்த நாட்டிலையும் மக்களுக்கு எதிரான ஆட்ச்சி நடந்தாலும் மக்களைக் காப்பாத்துவீங்களோ?
புஷ் - ஓம் நானில்லாட்டிலும் ஒபாமாவட்டச் சொல்லியாவது காப்பாத்துவேன்.
சுந்தர் - நிச்சயமா?
புஷ் - நிச்சயமா.
சுந்தர் - எங்கட நாட்டிலையும் கிட்டத்தட்ட மக்களுக்கு எதிரான ஆட்ச்சி மாதிரித்தான் நடக்குது. காப்பாத்துவீங்களோ?
புஷ் - ஓம் காப்பாத்தலாம். முதல் உங்கட நாட்டில எண்ணெய் வளமிருக்கா எண்டு சொல்லுங்கோ?
சுந்தர் - இல்ல
புஷ் - வையடா போனை நாயே
சுந்தர் - ...........................
(யாவும் உண்மை கலந்த கற்பனை)

வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஒரு தாய் மக்கள் நாமாவோம்.

இன்று எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 63 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
இந்தச் சுதந்திர தின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த 63 வருடங்களில் இலங்கையில் எத்தனை எத்தனை நிகழ்வுகள், அனர்த்தங்கள், போர்கள் அப்பப்பா......... என்றாலும் எல்லாம் அவன் செயல் என்று என(ம)து மனதைத்தேற்றிக்கொள்வோம்.
நடந்தவற்றை மறந்து, ஒன்றிணைவோம்.
எமது நாடு (emathu naadu)
அபே தேசயய் (apea theasaiyai)
அவ்வர் கங்க்றி(our country)

வியாழன், 27 ஜனவரி, 2011

Mr. இன்ஸ்பெக்டர்

ஒரு அதிரடிக்கதை ஒன்றை இந்தப்பதிவில் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இது சிறிய பதிவானாலும் கொஞ்சம் அதிரடி கொஞ்சம் வித்தியாசமான பதிவு. வாருங்கள் பதிவைச் சுவைப்போம்.

”நீ இப்ப சரண்டர் ஆகாட்டி நான்னுன்னை நோக்கிச்சுட வேண்டிவரும். மரியாதையாச்சரண்டர் ஆகிடு என்கவுண்டருக்குப் போக வைக்காத”
”டேய் நீ சுடும்வரைக்கும் நான் சும்மாவா இருப்பேன். நானுஞ்சுடுவேன். என்னட்டையும் துவக்கிருக்கு தெரியுமெல்லோ.” என்று தனது துவக்கைக்காட்டினான்.
ஏய் நீ துவக்கு வைச்சிருக்கிறது எனக்குத் தெரியும். நீ என்னைச்சுட்டாலும் எங்கடயரசு என்ர குடும்பத்தைக்கவனிக்கும். எனக்கு நல்லபெயரைத் தந்து ராஜமரியாதையோட கடைசிவரைக்குமென்ர பெயர் நிலைக்கிற மாதிரிச் செய்வாங்க. ஆனா நீ செத்தா உன்ரவுடம்ப எடுக்கக்கூட ஒருத்தனும் வரமாட்டாங்க. மரியாதையா வந்து சரணடை”
”டே போடா, நான் செத்தா என்ர அசிஸ்டென்ட் ஆனந்தென்ர ஏறியாவைப் பாத்துக்கொள்ளுவான். நீ என்னைக் கனவிலையும் நெருங்க முடியாது.”
மெல்ல மெல்ல அவனிருந்த இடத்திற்கருகிற்ச் சென்றான். இன்ஸ்பெக்டர் தனது துவக்கைச் சுடுவதற்கெடுத்து ரௌடியை நோக்கிச் சுட ஆயத்தமானான். ரௌடியும் தனது துவக்கயெடுத்து சுட ஆயத்தமானான். இருவரும் சுட்டனர்.
டுமீல்.. டுமீல்...................

”டேய் ராமு சோமு விளையாடினது காணும் வாங்க சாப்பிடலாம்.”
இருவருமெழுந்தனர் போட்டிக்கோடிச்சென்று மேசையிலயிருந்து சாப்பிட்டுக்கொண்டே
”நாளைக்கும் விளையாடுவோம்.”

சனி, 22 ஜனவரி, 2011

வௌ்ளை மாளிகை

வௌ்ளை மாளிகை என்பது அமெரிக்காவிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மாளிகையாகும். இங்கே தான் அமெரிக்காவின் மான்புமிகு ஜனாதிபதியவர்கள் வாழ்வார். தற்போது ஜனாதிபதியான ஒபாமா அவர்களும் வௌ்ளை மாளிகையிலேதான் வசிக்கிறார். இம் மாளிகையிலே வேறு நாட்டுத் தலைவர்களும் தங்கி வருகின்றனர். நீங்கள் அமெரிக்காவிற்குச் சென்றாலும் இம் மாளிகைக்குச் சென்று வரலாம்.

வௌ்ளை மாளிகையின் உட்புறத்தோற்றம்

130 இற்கும் அதிகமான அறைகளைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது இம் மாளிகை. ஜனாதிபதியின் இருப்பிடம் மற்றும் அவரின் குடும்பத்தின் இருப்பிடங்கள் இரண்டாம் மாடியிலே அமைந்திருக்கிறது. அதேவேளை விருந்தினர்களுக்கான அறைகள் மூன்றாம் மாடியிலே அமைந்திருக்கிறது.
முதலாம் மாடியிலே இருக்கும் பெரிய அறைகள் தேனீர் விருந்து, இரவு விருந்து போன்றவை பகிரப்படுகிறது. இங்கே சில அறைகள் அவற்றுக்குப் பூசப்பட்ட நிறத்தினடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஐந்து அறைகளைப் பார்வையிடலாம். அவற்றுள் நீலவறை, சிவப்பறை, பச்சையறைகளும் உள்ளடங்கும்.

நீள்வட்டக் காரியாலயம்.

ஜனாதிபதி தனது கடமைகளைச் செய்யும் காரியாலயமே நீள்வட்டக் காரியாலயம் எனப்படுகிறது. இது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு காரியாலயமாகும்.
ரோஜாத் தோட்டம் ஒன்று இக் காரியாலயத்திற்கு அருகாமையில் காணப்படுகிறது. ஜனாதிபதி மக்களுடன் தொலைக்காட்சி மூலமாகப் பேசுபவை இக் காரியாலயத்தில் அல்லது அருகிலுள்ள ரோஜாத் தோட்டத்திலேயே நடத்தப்படும்.
வௌ்ளை மாளிகையின் கட்டுமானம்
வெள்ளை மாளிகையைக் கட்டுவதற்காக ஜேம்ஸ் கோபன் என்ற ஐயர்லாந்து கலைஞனின் ஆக்கம் வெற்றிபெற்றது. அதன் பின்னர் வௌ்ளை மாளிகை ஜேம்ஸ் கோபனால்க் கட்டப்பட்டது. 1800இல் வௌ்ளை மாளிகை முற்றிலுமாய் முடிக்கப்பட்டது.

எரிந்த வௌ்ளை மாளிகை

1812ம் ஆண்டு பிரித்தானியரின் படைகள் அமெரிக்காவின் வௌ;ளை மாளிகையை முற்றுகையிட்டு எரிக்கப்பட்டன. இதன் புகை மாளிகையின் இடமுழுவதையும் கருமையாக்கிற்று. அதன் பின் 1815 இல் மீண்டும் இம் மாளிகை கட்டப்பட்டது. மீண்டுமாய் வௌ்ளை நிறப்பபூச்சும் பூசப்பட்டது.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

வணக்கம் தமிழர்களே

வணக்கம்.
எனது முதல்ப்பதிவினைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது சொந்தங்களாக எனது வலைப்பூவை ஆதரிக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்ப்பதைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். இதுவரை நீங்கள் எத்தனையோ வலைப்பூக்களைப் பார்த்திருப்பீரகள். அதுபோன்று இதையும் நீங்கள் வளர்க்க உங்களின் பின்னூட்டத்தைப் பதிவுசெய்வதால் முடியும் எனகூறிக்கொள்கிறேன். இது நிச்சயமாக பலவிதமான சுவையான அம்சங்களுடன் வலம் வரும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். அவை உங்களுக்குப் பிரயோசனமாகவும் இருக்கும்.
முதல்ப்பதிவைச் சிறு சம்பவத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருநாள் எனது நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த போது நண்பன் எனக்குக் கூறிய ஒரு சம்பவமே இது.
ஒரு இளைஞன் தனது வேலையில்லாப்பட்டதாரி நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு இருந்தபோது ஒருவன் தனது இலண்டன் பயணத்தைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டான். இதைக்கேட்ட அந்த இளைஞனுக்கு கையரிக்கத்தொடங்கியது. ”நானும் இலண்டனுக்குச் சென்று சம்பாதித்தால் என்ன?” என்று ஒரு யோசனை.
தனது மனதிலே வைத்து அதைப் புதைத்துக் கொண்டாலும் சாடையாய் ஒரு ஆசை. வேலையும் கிடைச்சபாடில்லை சரி என்னசெய்யலாம் எண்டு யோசிக்கும்போது இலண்டனே கண்முன் வந்தது.
சரி வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்கள்? என்று அறியத் தனது ஐடியாவை வீட்ட சொன்னான்.
”அப்பா இலண்டனுக்குப் போகப்போறேன்.”
அதுக்கு அப்பா சொன்னாராம்
”எங்கயெண்டாலும் போ ஆனா ஆறு மணிக்கு முதல் வீட்ட வந்திடு சரியோ”
”......”

இப்படிச் சுவையான பதிவுக்கு எம்மோடு பயணியுங்க............
Related Posts Plugin for WordPress, Blogger...