திங்கள், 28 பிப்ரவரி, 2011

எண்நான்கு எத்தனை?

இண்டைக்கும் ஒரு கதையப்பாப்பம்.

ஒரு ஆசிரியர் ஒருவர் பாடம் படிப்பிச்சுக்கொண்டிருந்த போது ஒரு மாணவன் கதைச்சதைக் கண்டுட்டார். அவருக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துட்டுது.
உடன கேட்டார் “எட்ட நாலால பெருக்கினா எத்தினை?” அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“சேர் இருபத்தினா...........”

“உங்களுக்கு படிப்பிக்கேக்க கவனிக்கத்தெரியாது... கேள்வி கேட்டா முழுசிக்கொண்டு நில்லுங்க.”
அவரே தொடர்ந்தார் ”போய் பிறின்சிப்பலட்ட கேட்டுட்டு வா” எண்டு கலச்சுவிட்டார். அவனும் பாவம் சரியெண்டு போய் அடியும் வாங்கிப்போட்டு விடையையும் கேட்டுட்டு வந்தான்.

ஆசிரியர் கேட்டார் ”என்ன பிறின்சிப்பல் சொன்னவர்?“
“சேர் முப்பத்தி ஒண்டு”

“என்ன?” அவரே தொடர்ந்தார் “இப்பத்தையப் பிறின் சிப்பலுகளை மாத்தவேணும். டேய் அவர் சொன்னதும் பிழையடா முப்பத்திமூண்டுதான் விடை”

“.....................”

இப்பிடி நடக்குதோ இல்லையோ, கேக்க நல்லாயிருக்கு இல்ல? என்ன நாலு தர எட்டு என்னண்டு தெரியாதோ?
நான் கல்குலேட்டரில பாத்ததில முப்பத்தி இரண்டு எண்டு விழுகுது. எதுக்கும் உங்கட கல்குலெட்டரிலயும் செக் பண்ணுங்கோ..

3 கருத்துகள்:

  1. உங்கள் வலைப்பதிவில் மறுமொழி மட்டுறுத்தலைச் செயற்படுத்தி இருந்தால் தயவு செய்து CAPTCHAவை நீக்கி விடுங்கள். பல சமயங்கள் மறுமொழியை விட CAPTCHA பெரிதாக இருக்கிறது !! இதை நீக்க blogger dashboard – settings – comments – show word verification for comments என்பதை no என்று தெரிவு செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  2. @ ♔ம.தி.சுதா♔
    நன்றி
    அவ்வாறே செய்கிறேன்

    பதிலளிநீக்கு

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...