செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பல்லேலக்கா

”பல்லேலக்கா பல்லேலக்கா ...............”

சில காலத்திற்கு முன் எல்லா வயதினரின் வாய்களும் முணுமுணுத்த வரிகள்.
”காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?” இப்பாடல் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்டாலும் சில விந்தைகள் இப்பாடலில் இருக்கிறது பார்த்தார்களா? ஏன் நானே இதுவரை சும்மாதான் பாடினேன். அதுசரி பல்லேலக்கா எண்டா என்ன?

அத விடு பாட்டு நல்லாயிருக்ககெல்லோ பாடிட்டுச்சும்மா இரு எண்டு சொல்லாமல் கொஞ்சம் என்னெண்டுதான் பாருங்கோவன். பாட்டு எதுகை மோனையால்த் தொடுக்கப்பட்டிருப்பதுக்காக பாடலாசிரியர் இப்பிடிப் பாடினாரோ தெரியாது. சீச்சீ அப்பிடியிருக்காது. ஏனெண்டா இப்பிடி ஒரு சொல் எதாவது ஒரு மொழியில இருந்து தான் வந்திருக்க வேணும். இதை ஆராட்சி செய்யக் காலம் பிந்தினாலும் ஒருக்கா இந்தப் பதிவினை ஏற்றுக்கொள்ளுங்க.
வைரமுத்து எனக்கு மிகவும் பிடித்ததொரு பாடலாசிரியராவார். இவரின் ரசிகன் என்ற வகையில். அவர் பாடிய ஒரு பாடலின் ஒரு சொல்பற்றி இங்கே நான் பதிகிறேன்.

சரி என்னண்டா நான் சொல்லவந்தத விட்டுட்டு என்னவோ பதியிறேன் எண்டு சினப்படாதேயுங்கோ. நான் சொல்ல வந்தத சொல்லுறேன். சரி திருப்பி பல்லேலக்காவைப் பாப்போம். இது பெயரா? வினையா? செயற்படுபொருளோ? சரி சரி குழம்பாதையுங்கோ. நான் சொல்லுறேன் .

பல்லேலக்கா என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும். இது ஒரு வகை இசைக்கருவியாகும். ரஷ்ய நாட்டில் மிகவும் பிரபல்யமான இசைக்கருவிகளில் இதுகும் ஒன்றாகும். முன்னே முக்கோண வடிவமும் அதனைத்தொடர்ந்து நீளமான செவ்வக வடிவ மரத்தில் கம்பியினைப் பாவித்து ஒலி எழுப்பக்கூடிய ஒரு இசைக் கருவி வகை.  இது மூன்று கம்பிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மிகவும் பரவலாகப் பேசப்படும் இசைக் கருவியாக இருந்தது உண்மைதான்.
இப்படியாக வைரமுத்து அவர்கள் இப்படியொரு சொல்லை வைத்து ஒரு பாடலையே பாடியுள்ளார்.

இது அவரின் திறமைகளில் ஒன்று..

3 கருத்துகள்:

  1. Boris Pasternak எழுதிய Dr. Zhivago கதையை David Lean இயக்கி 1965 இல் வெளியிடப்பட்ட திரைப்படம் பார்துள்ளீர்களா? பார்க்க வேண்டிய படம். அதில் இக் கருவி காட்டப்படும். மேலும் அப்படத்தில் பல தடவைகள் பின்னனி இசையாக வரும் அருமையான Lara's Theme என்ற இசையிலும் இக் கருவிக்கு முக்கிய பங்கு.

    ஒரு கலவையை இதில் கேட்டுப்பாருங்கள் : http://www.youtube.com/watch?v=4Yd2PzoF1y8 .

    'காவிரியாறும்' பாடலை அமெரிக்கர்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறீர்களா? பாருங்க :

    http://www.youtube.com/watch?v=tD6uK98QvQI
    http://www.youtube.com/watch?v=SVh72xjVcd4

    ~சேது

    பதிலளிநீக்கு
  2. @ ♔ம.தி.சுதா♔
    நன்றி
    தொடர்ந்தும் எதிர்பாருங்கள்...

    @ K. Sethu | கா. சேது
    உண்மைதான்

    பதிலளிநீக்கு

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...